Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து?

A car hit a person who was going to Shivanenu near Aravakurichi?

A car hit a person who was going to Shivanenu near Aravakurichi?

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து?

பீகார் மாநிலம் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் தில்தாஸ் இவருடைய மகன் தில்கோஸ். இவருடைய வயது 28. இவர் அரவக்குறிச்சி அருகேவுள்ள பண்ணப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பண்ணப்பட்டி குடகனாற்று பாலம் அருகே இரவு எட்டு முப்பது மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது திடீரென்று இவருக்கு பின்னால் வந்த கார் தில்கோஸ் மீது மோதியது.

இதனால் அவர் நிலை தடுமாறி பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இதைப் பார்த்த சாலையில் சென்றவர்கள் தில்கோஸ் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஏற்றிய நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version