NT DMK: கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி நடைமுறை வந்ததிலிருந்து அடக்குமுறை என்பது அதிகமாகி விட்டது. கருத்து சுதந்திரம் என்பது குறைந்து கொண்டே செல்கிறது. திமுக மற்றும் அதன் குடும்ப அரசியலை எதிர்த்து ஒருவர் வாய் திறந்து விமர்சனம் செய்தால் கூட இருக்குமிடம் தெரியாமல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான துரைமுருகன் கலைஞர் குறித்து விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடினார்.
உடனடியாக துரைமுருகன் மீது வழக்கு பாய்ந்தது. இதனை கண்டிக்கும் வகையில் சீமான், திமுகவிற்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கொலை செய்பவர்கள் மீதெல்லாம் வழக்கு போட நேரமில்லை. அதை தவிர்த்து தங்களை விமர்சிப்பவர்களை அடக்குவதே முதல் வேலையாக வைத்துள்ளனர். அப்படி பார்க்கும் பொழுது நானும் அதே பாடலை பாடுகிறேன் என் மீதும் வழக்கு போடட்டும் எனக் கூறினார்.மேற்கொண்டு அவர் மீது புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தான்தோன்றி மலை காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.