‘நிதிக்குழுத் தலைவரான அரவிந்த் பணகாரியா’ செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார். அதற்கு முன் கோவாவில் நிதி குழுவினருடன், கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார் அவர். அப்போது நிருபர் ஒருவர், பல மாநிலங்களில் உள்கட்டமைப்புக்காக வழங்கும் நிதிகளை இலவச திட்டங்களுக்காக செயல்படுத்துகின்றனர். இப்படி செய்வது அம்மாநிலத்தை பாதிக்காதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிதிக்குழுத் தலைவர் அரவிந்த், இலவசங்கள் வேண்டுமா? அல்லது சிறந்த சாலைகள், மேம்பாட்டு குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி கொண்ட தரமான மாநிலம் வேண்டுமா? என மக்கள் தான் அவர்களின் ஓட்டின் மூலம் முடிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அந்த பணம் அத்திட்டத்திற்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஜனநாயக நாட்டில் மாநில அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றொரு பெரிய அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதில் நிதிக்கமிஷன் தலையிட முடியாது. பொருளாதார நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு, கேள்விகளை வேண்டுமானால் எழுப்பலாம். நிதிகளை பிரித்துக் கொடுத்த பின் மாநில அரசுதான் அந்நிதிச் செலவுக்கு பொறுப்பு என்று அவர் கூறியிருக்கிறார்.