கடுமையான மூட்டு வலிக்கு மருந்து ஒரு பல் “பூண்டு”!! இதை இப்படி ஒருமுறை பயன்படுத்துங்கள்!!

0
177
A clove of "garlic" is the cure for severe joint pain!! Use it like this once!!

இக்காலத்தில் நோய்தொற்று இல்லாத இடமே இல்லை.மனிதர்கள் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறையே மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.மூட்டு பகுதியில் உள்ள எலும்பு தேய்மானம் அடைந்து நாளடைவில் மூட்டு வலியை ஏற்படுத்திவிடுகிறது.இந்த மூட்டு வலி குறைய பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை பூண்டு பற்கள் – ஆறு

2)பசும் பால் – ஒரு கிளாஸ்

3)பனைவெல்லம் அல்லது கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் வெள்ளை பூண்டு பற்கள் ஆறு என்ற எண்ணிக்கையில் எடுத்து தோலை உரித்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை நீரில் போட்டு சுத்தம் செய்து கத்தியை கொண்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து ஒரு கிளாஸ் பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை கொதிக்கவிடவும்.

பால் கொதிக்கும் பொழுது நறுக்கிய வெள்ளைப்பூண்டு பற்களை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்கவும்.வெள்ளை சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை தவிர்க்கவும்.

இந்த பூண்டு பாலை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள வலி குறையும்.மூட்டு ஜவ்வுகள் வலுப்பெறும்.சர்க்கரை நோய்களிகள் இனிப்பு சேர்க்காமல் பூண்டு பால் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

தினமும் பூண்டு பால் பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் போன்ற நோய் பாதிப்புகள் குணமடையும்.தொண்டை சளி பாதிப்பு உள்ளவர்கள் பூண்டு பால் அருந்தினால் கெட்டி சளி கரைந்து நாசியில் வெளியேறிவிடும்.