Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்  சாலையில் இருந்த வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த சம்பவத்தில் மாரிமுத்து குமார் பலத்த காயம் அடைந்தார். மேலும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாரிமுத்து குமாருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version