Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவில் காமெடி நிகழ்ச்சி நடத்திய நிறுவனம்! 16 கோடி அபராதம் விதித்த அரசு!!

#image_title

சீனாவில் காமெடி நிகழ்ச்சி நடத்திய நிறுவனம்! 16 கோடி அபராதம் விதித்த அரசு!
சீனா நாட்டில் காமெடி நிகழ்ச்சி நடத்தியத்திற்கு அந்நாட்டு அரசு காமெடி நிகழ்ச்சியை நடத்திய நிறுனத்திற்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சீனா நாட்டில் பிரபலமான நிறுவனம் சியாகுவே. சியாகுவே நிறுவனம் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி வரும் நிறுவனமாகும். இந்த சியாகுவே நிறுவனம் சார்பில் சீனாவில் ஒரு தியேட்டரில் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த காமெடி நிகழ்ச்சியில் சீனா நாட்டின் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.
இந்த காமெடி நிகழ்ச்சியில் காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி அவர்கள் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷியாகுவே நிறவனத்திற்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதித்து சீன அரசாங்கம் உத்தரவிட்டது.
தவறை உணர்ந்ததாக நடிகர் லீ ஹாவ்ஷி மன்னிப்பு கேட்டு அனைத்து காமெடி நிகழ்ச்சிகளையும் நிறுத்தப் போவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து சியாகுவே நிறுவனம் நடிகர் லீ ஹாவ்ஷி அவர்களை அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தது. நடிகர் ஹாவ்ஷி அவர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Exit mobile version