எல்லாம் கலையுது.. மா செயலாளர்கள் பொறுப்புக்கு வரும் ஆப்பு!! புதிய நிர்வாகிகளை இறக்கும் ஸ்டாலின்!!
மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என்ற இடத்தை பிடித்த திமுக, இதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தற்போதையிலிருந்தே அதற்குரிய பணிகளை செய்து வருகிறது. இதனின் முதல் கட்டமாக நேற்று ஒருங்கிணைப்பு குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள மக்களின் நிறை குறை மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளாராம்.
அதேபோல அடுத்தக்கட்டமாக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதுள்ள மாவட்டங்களை மேற்கொண்டு பிரித்து அதற்குரிய புதிய நிர்வாகிகளை அமர்த்த இருப்பதாக முதல்வர் முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு இது குறித்து பேசுவதற்காக அடுத்து மாவட்ட செயலாளர் அமைத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அனைத்தும் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினால் இவ்வாறு மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக கூறியுள்ளனர். மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் புதிய நிர்வாகிகள் அமர்த்தப்படுவர் அதேபோல தொகுதி வாரியாக ஒவ்வொரு மக்களின் நிறை குறை மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட முடியும்.
முன்பை விட தற்பொழுது அரசியல் களத்தில் போட்டி முனை அதிகரித்துவிட்டது.மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென்றால் தற்போதிலிருந்தே தீவீர முயற்சியில் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் உள்ளாராம்.குறிப்பாக விஜய் க்கு அதிகப்படியான இளைஞர்கள் ஆதரவு அதிகமென்பதால் அதனை சமன் செய்ய பல திட்டங்களை கையில் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.