வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!
ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஆணுறை விற்பனை அதிகரித்து காணப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவை தலைமையிடமாக கொண்டு பரவிய தொற்று வியாதியான கொரோனாவால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் இங்கிலாந்து நாட்டின் யுனிலீவர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சீன நாட்டின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவால் அந்த நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிகவும் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சீனாவின் நுகர்வோர் எண்ணிக்கை கூடிய விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என்று நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.
கொரோனா தொற்றுக்குப் பின்னால் சீனாவின் வளர்ச்சி மிகவும் மந்தமான நிலையில் உள்ளது என இந்த மாத பொருளாதார தரவு தெரிவிக்கிறது. இதன் காரணமாக குலைந்து போன நுகர்வோர் நம்பிக்கையை மீட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிக நடவடிக்கைகளை மேலும் எடுக்க வேண்டிய தேவை அந்த நாட்டு அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது என்று அந்த தரவு தெரிவிக்கிறது.
நுகர்வோர் தரப்பில் வீழ்ச்சி கண்ட போதும் ஆணுறைகளின் விற்பனை அந்த நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது என மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வைப் பற்றி டியூரக்ஸ் என்ற ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெகிட் என்ற நிறுவனத்தின் சிஇஓ துரந்த் கூறுகையில் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியில் மந்தம் காணப்பட்டாலும் தம்பதியை உற்சாகப்படுத்தும் தயாரிப்புகளின் விற்பனை அளவு அதிகரித்துள்ளது.
இந்த ஆணுறை தயாரிப்பில் புதிய மூலப்பொருட்களை கொண்ட புதுமையான விஷயங்கள் புகுத்தப்பட்டது. இதில் முக்கியமாக சீனாவில் இரவு வாழ்க்கையை மக்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர் என அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே அந்த நிறுவனத்திற்கு கொரோனா தொற்றுக்கு பின்னால் மொத்த வருவாயின் வளர்ச்சி 8.8% உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரையில் இல்லாத அளவில் மிக மென்மையான ஆணுறைகளை சீனாவில் தயாரிக்கும் திட்டம் உள்ளது, என்றும் அதற்கான திட்ட பணிகள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரும் என்று அந்த நிறுவனம் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.