Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!

a-couple-who-wandered-around-carefree-the-police-lifted-the-cage

a-couple-who-wandered-around-carefree-the-police-lifted-the-cage

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை பணத்தை பறித்து சென்றனர்.இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதனையடுத்து இந்த கொள்ளைகார கும்பலை பிடிக்க வேண்டும் என்று போலீசார் குழு ஓன்று அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் பெண்களிடம் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியை சேர்ந்த சித்திரவேல் மற்றும் அவருடைய மனைவி பார்வதி என்பது தெரியவந்தது.போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் இவர்கள் குமரி மாவட்டம் மட்டுமின்றி அறந்தாங்கி ,சென்னை ,பாண்டிச்சேரி ,கூடலூர் ,தர்மபுரி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.மேலும் விசாரணையில் அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.அதனையடுத்து அவர்களிடம் இருந்து பத்து பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Exit mobile version