தமிழ் சினிமாவில் அரசியல் தெரியாமல் படம் தயாரித்த கிரிக்கெட் வீரர்!! தோனிக்கு ஐடியா கொடுத்தது இவர் தான்!!
இந்திய கிரிக்கெட் எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர். தற்போது தமிழ் சினிமாவில் திரும்பும் பக்கம் எல்லாம் தோனி பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரும் இவர் மனைவி சாகக்ஷியும் இணைந்து தோனி என்டர்டேய்ன்மென்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த மூலம் ரோர் ஆஃப் தி லயன் என்ற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படம் மற்றும் வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
மேலும் சென்னையில் தோனி விளையாட தொடங்கிய காலம் முதல் இதுவரை தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் அன்பை செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்ரி செலுத்தும் வகையில் இவர் தயாரிக்கும் முதல் படத்தை தமிழ் தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை இயக்குனர் தமிழ்மணி இயக்குகிறார். இந்த படத்திற்கு எல்ஜிஎம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யான் நடித்துள்ளர்.
மேலும் இந்த படத்தில் நதியா, வினோதினி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜூலை 28 ஆம் தேதி திரையரங்களில் வெளிவந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு தோனி ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் படம் பற்றிய தனது கருத்துகளை தெரிவித்தார்கள்.
இந்த தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் தான் ஆலோசனை வழங்கி உள்ளார். ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள அரசியல் தெரியாமல் இங்கு படம் தயாரித்துள்ளார் என்று பலர் விமர்சனம் செய்துள்ளார்கள். ஆனால் பொதுவாக படம் நல்ல இருக்கிறது என்றும், சிலர் விமர்சனம் செய்யும் அளவு எதும் இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.