Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

#image_title

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்!

போதை அதிகமானதால் 6 வயது மகளை தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை சேர்ந்தவர்  மகேஷ். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. மகேசின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மகேஷ் வேறு திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் தனது மகளை தனியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஷ் மிகுந்த குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் அவரது மகள் நட்சத்திராவும் மகேஷின் தாயும் இருந்துள்ளனர். போதை மிகவும் தலைக்கேறியதால் மகேஷ் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் தகராறில் ஈடுபட்ட மகேஷ் அரிவாள் எடுத்து தனது மகள் என்று கூட பார்க்காமல் அந்த பிஞ்சு குழந்தையை சரமாரியாக வெட்டினார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த தனது தாயையும் இரக்கமில்லாமல் மகேஷ் வெட்டினார். இந்த கொடூர சம்பவத்தில் அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தது.

தான் பெற்ற மகள் என்றும் பாராமல் பூ போன்ற அந்த குழந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன் தாயையும் குத்தியதால் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். போலீஸ் விசாரணையில் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரியவந்துள்ளது.

Exit mobile version