ஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும்.. முகத்தை பளபளப்பாக்கும் பேஷியல் க்ரீம் வீட்டிலேயே செய்து விடலாம்!!

0
199
Want your face to glow? Mint and basil are enough for that!

ஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும்.. முகத்தை பளபளப்பாக்கும் பேஷியல் க்ரீம் வீட்டிலேயே செய்து விடலாம்!!

மங்கையரே உங்கள் முகம் அழகாகவும்,பளபளப்பாகவும் காட்சி தர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)கற்றாழை ஜெல்
3)தேன்
4)பால்

செய்முறை:-

ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய வெள்ளரிக்காய்,கற்றாழை ஜெல்,50 மில்லி காய்ச்சாத பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்திற்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கி முகம் போல் பளபளப்பாக காட்சியளிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)தயிர்
3)அரிசி மாவு

செய்முறை:-

ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.

1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே முகம் பொலிவாகவும்,அழகாகவும் மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)கேரட்
3)வைட்டமின் ஈ மாத்திரை

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் வெள்ளரி துண்டு,ஒரு கேரட் சேர்த்து காய்ச்சாத பால் சிறிதளவு ஊற்றி மைய்ய அரைக்கவும்.பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும சுருக்கம்,கொப்பளம்,டெட் செல்கள் நீங்கி முகம் பொலிவாகவும்,இளமையாகவும் காணத் தொடங்கும்.