Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மரணம் தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும்!! இதை எப்படி பயன்படுத்தலாம்!!

#image_title

மரணம் தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும்!! இதை எப்படி பயன்படுத்தலாம்!!

கருஞ்சீரகம் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான பல விதமான சத்துக்கள் இதில் உள்ளன. இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், விட்டமின் B1,B2,B1 போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய மருத்துவ பயன்கள் இதில் உள்ளது. கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

சாதாரண சளியில் இருந்து கேன்சர் நோய் வரை குணப்படுத்தக்கூடிய தன்மை உள்ளது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒன்றாக கருஞ்சீரகம் அமையும். கருஞ்சீரகத்தை பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சேர்த்து கலக்கி காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிறு உப்பசம், வயிறு எரிச்சல், வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக சரியாகும். அதுமட்டுமில்லாமல் இரைப்பையில் தோன்றக்கூடிய பாக்டீரியா தொற்றுக்கள், உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்த பற்களை கரைப்பதற்கு கருஞ்சீரகம் பயன்படுகிறது. இந்த பிரச்சனையில் இருப்பவர்கள் கருஞ்சீரகப் பொடி ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி அதனுடன் தேன் சேர்த்து குடித்து வரவேண்டும். இதுபோன்று காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் எடுத்து வருகையில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்த கற்கள் வெளியேறும்.

கருஞ்சீரக பொடி ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சேர்த்து அதனுடன் பூண்டு மூன்று பல் அரைத்து எதனையும் அதனுடன் சேர்த்து குடித்து வருகையில் ஆஸ்துமா மற்றும் சளி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மூக்கடைப்பு பிரச்சினையை சரி செய்யும். இதற்கு ஒரு தேக்கரண்டி கருஞ்சிறுக்க பொடியை,50ml தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆரிய பின் இரண்டு சொட்டு மூக்கில் விட்டு வருகையில் மூக்கடைப்பு சரியாகும்.

கருஞ்சீரகத்தில் டைமோனின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தயாரிக்க கூடியது. அதுமட்டுமில்லாமல் கருஞ்சீரகத்தில் நல்ல கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால் நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கறக்கக்கூடிய தன்மை உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் இதனை எடுத்து வரவையில் கொழுப்புகள் கரையும். இதனுடன் அதிக எடை உள்ளவர்களும் இதனை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.

பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தீர்வளிக்கும். கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது பண வெள்ளத்துடன் சேர்த்து மாதவிடாய் காலத்திற்கு 10 நாட்களுக்கு முன் சாப்பிட்டு வருவதில் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி குணமாகும். புற்றுநோயை குணப்படுத்த கருஞ்சீரகம் பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகள் சரி செய்ய இந்த கருஞ்சீரகம் துணை புரிகிறது.

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையான சொரியாசிஸ், தேம்பல் போன்ற நோய்களை குணமாக்க கூடிய தன்மை இந்த கருஞ்சீரகத்திற்கு உள்ளது. பச்சைப்பயிறு கருஞ்சீரகத்தை சேர்த்த அரைத்து அந்த பொடியை தேய்த்து வருகையில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். பாலில் கருஞ்சீரகப் பொடியை சேர்த்து முகத்தில் பயன்படுத்தி வருகையில் முகப்பருக்கள் வராமல் தடுக்கும். இதனை பயன்படுத்தி நன்மைகளை பெற்று மகிழுங்கள்.

Exit mobile version