Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

#image_title

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.

நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம். ஆனால், டிக்கெட் விற்பனை விற்று தீர்ந்தும் கூட நேற்று மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், டிக்கெட் கட்டணமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாம்.

இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பேசுகையில், இந்த தொடரை நடத்துவது பாகிஸ்தான் தான். அதனால் கட்டணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் நிர்ணயிக்கிறது. குறைந்த டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் தொடங்கி ரூ.50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இலங்கையில் பொருளாதார சிக்கல் தலைவிரித்தாடுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து எப்படி போட்டியை காண மக்கள் வருவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version