அசுத்தமான கல்லீரலை ஒரே நாளில் சுத்தப்படுத்திடலாம்!! 100% இயற்கை முறை!!

0
167
#image_title

அசுத்தமான கல்லீரலை ஒரே நாளில் சுத்தப்படுத்திடலாம்!! 100% இயற்கை முறை!!

நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழக்க கொழுப்பு நிறைந்த உணவு,அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

உடலில் மிகவும் முக்கியமான உள்ளுறுப்பு என்று சொல்லப்படும் இந்த கல்லீரலை ஆரோக்யமாக வைக்க துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் மது மற்றும் போதை பழக்கத்தை கைவிட வேண்டும்.

காய்கறிகள்,பழங்கள்,தனியா வைகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது.
மேலும் சுரைக்காய்,கொத்தமல்லி கலந்த சாற்றை பருகுவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சுரைக்காய் – 10 சிறு துண்டுகள்

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1) முதலில் சுரைக்காய் எடுத்து தோல் நீக்கி அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.10 துண்டுகள் எடுத்தால் போதும்.

2) வாசனை நிறைந்த கொத்தமல்லி தழை சிறிதளவு எடுத்து கொள்ளவும்.

3) ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காய் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

4) பிறகு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளவும்.

5) அதில் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.