Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை !

#image_title

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்!

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் தற்பொழுது பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா அவர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அடிக்கடி அந்த பெண்ணும் சரண்யா பொன்வண்ணன் அவர்களும் வாய் சண்டையும் இட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று(மார்ச்31) சரண்யா பொன்வண்ணன் அவர்கள் காரை அவருடைய வீட்டில் நிறுத்தியுள்ளார். அப்பொழுது சரண்யா பொன்வண்ணன் அவர்களின் கார் லேசாக பக்கத்து வீட்டு சுவரின் மேல் மோதியுள்ளது. இதையடுத்து அந்த பக்கத்து வீட்டு பெண் சரண்யாவுடன் சண்டை போட பதிலுக்கு நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அந்த பக்கத்து வீட்டு பெண் காவல் நிலையத்திற்கு சென்று நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரில் “நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் கார் எங்கள் வீட்டு சுவரின் மீது உரசியது. இதை கேட்ட எங்களை நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் எங்களின் வீட்டுக்குள் புகுந்து எங்களை ஆபாசமாக திட்டினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரபல நடிகையாக இருக்கும் சரண்யா பொன்வண்ணன் அவர்களின் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புகாரை நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் பக்கத்து வீட்டு பெண் நேரடியாக சென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version