ஆதம்பாக்கத்தில் வீட்டின் முகப்பில் 16 அடி உயர பேனா வைத்த திமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ
சென்னை மெரினா கடல் பகுதியில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பல சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆதம்பாக்கம் 165வது வார்டு திமுக பிரமுகர் லியோ பிரபாகரன் தன்னுடைய புதிய வீட்டின் முகப்பில் ரூ. 3 லட்சம் செலவில் 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனாவை அமைத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.