சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே! 

0
174
A dress that turns urine into drinking water! You find new things!

சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே!

கடல் நீரை குடிநீராக மாற்றுவது போலவே தற்பொழுது சிறுநீரை குடிநீராக மாற்றும் ஒரு உடையை நியூயார்க் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் பல புது வகையான கண்டுபிடிப்புகள் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஹோட்டலில் தானாக சேவை செய்யும் ரோபோ, தானாக ஓடும் கார் போன்று பல வகையான கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அதே போல கடல் நீரை குடிநீராக மாற்றுவது குறித்தும் கழிவு நீரை குடிநீராக மாற்றுவது குறித்தும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூயார்க் நகரத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருபடி மேலே சென்று சிறுநீரை குடிநீராக மாற்றும் புதிய உடை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உடை யாருக்காக என்றால் சாதாரண மக்களுடைய பயன்பாட்டுக்கு அல்ல. முழுக்க முழுக்க விண்வெளி செல்லும் விண்வெளி வீரர்களுக்காக மட்டுமே இந்த புதிய உடையை நியூயார்க் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது விண்வெளியில் இருப்பவர்கள் தங்களுடைய கழிவுகளை டயப்பரில் சேகரித்து வைக்கின்றனர். அதன் பின்னர் அந்த கழிவுகள் வளிமண்டலத்தில் எரிக்கப்படுகின்றது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் நியூயார்க் விஞ்ஞானிகள் இந்த புதிய உடையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உடை மூலமாக சிறுநீரை ஒரு சில நிமிடங்களில் குடிநீராக மாற்ற முடியும். இந்த உடை 8 கிலோ எடையை கொண்டுள்ளது. இந்த ஆடை குறித்து “நாங்கள் சிறுநீரை சில நிமிடங்களில் குடிநீராக மாற்றும் உடையை விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக செய்துள்ளோம். இந்த உடை சில மணி நேர விண்வெளி நடைபயணத்திற்கு மட்டுமே தீர்வாக அமையும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.