உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.இந்த இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் கெட்ட கழிவுகளை அகற்ற இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து கருஞ்சீரகத்தை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதில் அரைத்த கருஞ்சீரக பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
**இந்த கருஞ்சீரக பானத்தை லேசாக ஆறவைத்து பருகினால் இரத்தத்தில் தேங்கிய கொழுப்புகள் கரைந்து வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிளாஸ் ஒன்றில் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து காலை நேரத்தில் பருக வேண்டும்.இந்த பானம் இரத்தத்தில் தேங்கி காணப்படும் கொழுப்புகளை கரைத்து தள்ளும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
**இந்த நெல்லிக்காய் பானத்தை நன்றாக கொதிக்க வைத்து பருகினால் இரத்தத்தில் தேங்கிய கெட்ட கழிவுகள் மற்றும் கொழுப்பு சீக்கிரம் கரைந்து வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா இலைகள் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு புதினா இலைகள் ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
**அடுத்து இந்த புதினா நீரை நன்றாக கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்ட வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.
**இந்த புதினா பானத்தை பருகி வந்தால் இரத்தத்தில் தேங்கிய கொழுப்பு கரைந்துவிடும்.