Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

தென்னிந்தியாவில் பலரால் அறியப்பட்ட நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். இவர் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்துவிட்ட நிலையில் மேலும் பல்வேறு படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரின் இணையதள பக்கங்கள் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு சிக்குவது வழக்கம்.

இந்நிலையில் இதேபோல் பரபரப்பை உண்டாக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது இணையதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
நானும் எனது வயதான பெற்றோர்களும் ஆளே இல்லாத விமான நிலையத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகளால் மிகுந்த தொல்லைக்கு ஆளானோம்.

அவர்கள் எங்கள் மீது ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்திய போதும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே எங்களிடம் தொடர்ந்து பேசினார்கள். இந்தச் செயலை எதிர்த்து நாங்கள் கேட்டபோது இந்தியாவில் இனிமேல் அப்படித்தான் இருக்கும் என்று எங்களிடம் கூறினர்.

இவ்வாறு நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளதற்கு அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சித்தார்த்தின் இந்த பதிவை பகிர்ந்து மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version