Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயால் கண்கலங்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

இளைய தளபதி விஜய் மிகவும் திறமையான  நடிகர்.  இவரின் தந்தை சந்திரசேகர் ஒரு இயக்குனர்.  நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.  இவரின் தந்தை ஒரு  பிரபல இயக்குனராக இருந்தாலும்  நடிகர் விஜயின் நடிப்பு திறமையால் மட்டுமே உச்ச நட்சத்திரம் எனும் நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நடிகர் விஜய், திருப்பாச்சி திரைப்படத்தில் அண்ணன்  கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்,  வேலாயுதம் திரைப்படத்திலும் அண்ணன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். ஏனெனில் இவருக்கு வித்யா எனும் தங்கை இருந்தார். ஆனால் அவர் இரண்டு வயதில் இறந்துவிட்டார்.

வேலாயுதம் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சரண்யா அத்திரைப்படத்தில் தான்  இறப்பது போல் நடிக்கும் சீன்களில் நடிகர் விஜய் நிஜமாகவே தேமி தேமி அழுவது போல் நடித்திருப்பார். ஏனெனில் இவர் ஒரு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது இவருக்கு இவர் தங்கை நினைவிற்கு வருவார்கள்.  அதனால் இவர் எமோஷனல் சீன்களில் பார்வையாளர்களே கண் கலங்கும் படி நடித்திருப்பார்.

நடிகை சரண்யா,  தளபதி விஜய் தன்னிடம் தனது தங்கை பற்றி இவ்வாறு கூறியதாக இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசியுள்ளார்.  மேலும் நடிகை சரண்யா தான் விஜய்யுடன் நடித்ததில் பெருமை படுவதாகவும் கூறியுள்ளார். மீண்டும் தளபதி விஜயுடன் ஒரு படம் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version