பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

0
141

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!!

 

நேர்காணல் அதாவது பேட்டி எடுப்பதாக கூறி பிரபல நடிகை ஒருவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை தற்பொழுது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நடிகையை சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ்(Followers) மத்தியில் இண்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் அந்த நடிகையை பேட்டி எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி அந்த போஜ்புரி நடிகை அந்த இண்ஸ்டாகிராம் நண்பரை குர்கிராம் பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றுக்கு பேட்டி எடுக்க வர சொன்னார். அதன்படி அந்த நபரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வந்துள்ளார். பின்னர் அந்த நடிகையை வரவேற்று ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பேட்டி எடுப்பது போல அந்த இண்ஸ்டாகிராம் நண்பர் பேச்சு கொடுத்துள்ளார்.

 

பின்னர் அந்த நபர் போஜ்புரி நடிகையை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த நடிகை நண்பரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே வந்தார். பிறகு இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து காவல் துறை உதவி ஆணையர் வருண் தஹியா அவர்கள் “பாதிக்கப்பட்ட போஜ்புரி நடிகை இண்ஸ்டாகிராம் பக்கத்தை சேர்ந்த நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நேர்காணல் எடுப்பதாக கூறி அவரை அழைத்து வந்த அவருடைய நண்பரே அந்த நடிகையை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நடிகையை ஆபாச வீடியோ எடுத்தும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

 

போஜ்புரி நடிகையை பலாத்காரம் செய்த நண்பரின் பெயர் மகேஷ் பாண்டே என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான மகேஷ் பாண்டே மீதும் அவருடைய நண்பர்கள் மீதும் கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.