Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது !!

#image_title

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது
பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டில் தற்பொழுது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். அந்த நடிகை யார் என்றால் பிரபல நடிகை மோகினி அவர்கள் தான்.
பிரபல நடிகை மோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானார். ஈரமான ரோஜாவே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர். கார்த்தி நடிப்பில் வெளியான நாடோடி பாட்டுக்காரன் என்ற திரைப்படத்திலும் நடிகை மோகினி அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை மோகினி அவர்கள் வனஜா கிரிஜா, கண்மணி, நான் பேச நினைப்பதெல்லாம், தாய்மொழி, சின்ன மருமகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடிகை  மோகினி. அவர்கள் நடித்துள்ளார். இதையடுத்து 1999ம் ஆண்டு வெளிநாட்டு சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை மோகினி அவர்கள் வெளிநாட்டிலேயே செட்டிலாகி விட்டார்.
சமீபத்தில் நடிகை மோகினி அவர்கள் சமூக வலைதளத்தில் இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் இது நடிகை மோகினியா என்று பார்த்தனர்.
நடிகை மோகினி அவர்களுக்கு கண் பூனைக் கண் போன்று இருக்கும். அதனால் இவரை பூனைக் கண் நடிகை மோகினி என்றும் அழைப்பார்கள். இந்நிலையில் நடிகை மோகினி அவர்கள் வெளிநாட்டில் செட்டிலாகி அங்கேயே கிறிஸ்துவ மத போதகராக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Exit mobile version