Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை

#image_title

ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை

ஐட்டம் டான்சராக இருந்து ஆடை வடிவமைப்பாளராக மாறி தொழில் அதிபராக வளர்ந்துள்ளார் நடனக் கலைஞர் ரகசியா.

ரகசியா ஒரு இந்திய நடிகை,  மாடல் மற்றும் நாடகம் மற்றும் நடன கலைஞர் ஆவார்.

பிரபல நடன கலைஞரான ரகசியா அவர்கள் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் மனைவியின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உதவியாளராகவும், நடன கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கிய ரகசியா அவர்கள் பிறகு நாடகக் கலைஞராகவும் மாறினார். போகப்போக படிப்படியாக தனக்கென ஒவ்வொரு தனி அடையாளத்தையும் தேடிக்கொண்டார்.

அதாவது ஐட்டம் டான்ஸ் எனப்படும் குத்துப் பாடல் மூலம் பிரபலமான நடிகை ரகசியா அவர்கள் சரண் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் “சிறுக்கி சிரிச்சு வந்த சீனா தானடா” இந்த  பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். பிறகு ரகசிய டான்ஸ் கலைஞராக புகழின் உச்சிக்கே சென்றார். தமிழில் வெளியான பரவசிவம்; யாரடி நீ மோகினி; அட்டகாசம் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி புகழ்பெற்றார். தற்போது ரகசியா மும்பையில் தனது சொந்தமாக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது  சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக மாறி உள்ளார்.

குத்துப் பாடல் மூலம் பிரபலமான நடன கலைஞர் ரகசியா அவர்கள் இன்று தொழிலதிபராக மாறி உயர்ந்துள்ளது, பாலிவுட்; கோலிவுட்; சான்டல்வுட் என அனைத்திலும் உள்ள கலைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version