2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தை அமர்தீப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அவருடைய தந்தை தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தலைவி என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் பாஜக கட்சியின் அபிமாணியாக இருக்கிறார்.
மேலும் நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் பாஜக கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அவர்களின் தந்தை அமர்தீப் அவர்கள் அந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் அவர்களின் தந்தை அமர்தீப் அவர்கள் “பாஜக கட்சி சார்பாக கங்கனா ரணாவத் 2024ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுகிறார். எந்த தகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தொகுதி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.