Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை…

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை…

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பொழுதும் டேன்சர் ஒருவர் தவறாக நடந்ததாக பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் வம்சம், அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2016ம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் தான் யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் தன்னிடம் டேன்சர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் “2006ம் ஆண்டு கும்பகோணம் கோவிலில் நாங்கள் செல்லமடி நீ எனக்கு என்ற டைட்டில் சாங்கை ஷூட் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது தான் யானை என்னை தாக்கியது. யானை என்னை தும்பிக்கையால் பிடித்து தாக்கியது. மேலும் அந்த யானை என்னை மிதித்தது. அதில் எனக்கு உடலில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த என்னை அங்கு இருந்தவர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர்.

அதில் டேன்சர் ஒருவர் என் மார்பை பிடித்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். யானை மிதித்தது கூட பெரிதாக தெரியவில்லை. உயருக்கு போராடிய நிலையிலும் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதுதான் என்னை காயப்படுத்தியது.

என்னை யானை தாக்கிய பொழுது என்னை வைத்து விவாதங்கள் நடத்தினார்கள். எனக்கு மாதவிடாய் இருந்தது. அதனால் தான் யானை என்னை தாக்கியது என்று கூறினார்கள். எனக்கு மாதவிடாய் இருப்பது இவர்களுக்கு எவ்வாறு தெரியும். நான் கூறினால் தான் மாதவிடாய் இருப்பது தெரியும். இவர்கள் கூறியது உண்மை இல்லை.

ஆனால் யானை கோபம் அடைவதற்கு உண்மையான காரணம் வேறு ஒன்று. அதாவது என்னை தாக்கிய யானையை மூன்று முறை நடக்க வைத்து டேக் எடுக்க செய்தது தான் யானை கோபம் அடையக் காரணம் ஆகும். அது ஷூட்டிங் என்று அழைத்து வரும் யானை கிடையாது. உண்மையில் அந்த யானை கோவில் யானை ஆகும். இதைக் கூட நான் இது வரை யாரிடமும் சொன்னது கிடையாது. இன்று வரை இந்த விபத்து குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை” என்று கூறினார்.

Exit mobile version