அமைச்சர் முன்னிலையில் யூட்யூபில் அந்த படம் பார்த்த அரசு பெண் அதிகாரி! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!
தமிழக முழுவதும் கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அங்கு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மகளிருக்கு 20 லட்சம் வரை கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி மற்றும் கிராமங்களில் இதுபோல கூட்டம் நடைபெற்றது.
அதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த வரிசையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பங்கேற்றார். அவ்வாறு பங்கேற்ற அமைச்சர் மக்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தார்.அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதனை சிறிதும் கூட கவனிக்காமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டே ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் இன்பா என்பவர் செல்போனை உபயோகம் செய்துள்ளார்.
இவர் அமைச்சர் முன்னிலையில் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.அது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் ஓர் நிகழ்ச்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் அவரது பணியாளரிடம் போய் செருப்பு கொண்டு வா என்று கூறி,முதல்வர் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அவர் செய்தது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலின், அமைச்சர்களை பார்த்து என்னை தூங்க கூட விடாமல் இருக்கிறது உங்களது சர்ச்சை உடைய பேச்சு என்று கூறினார். நீங்கள் பேசும்பொழுது கவனித்து பேசுங்கள் என்று அறிவுறுத்தினார். ஆனால் கட்சி நிர்வாகிகள் எதனையும் கண்டுகொள்ளாமல், அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளேயே சிக்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது அமைச்சர்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. கிராம சபை கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் அமைச்சர் பேசி கொண்டிருக்கும் பொழுது ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் இன்பா இவ்வாறு செல்போனில் படம் பார்த்தது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.