வீட்டில் உள்ள எலிகளின் நடமாட்டத்தை கன்ட்ரோல் செய்யும் காய்ச்சல் மாத்திரை!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!
மண் வீடு,ஓட்டு வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு இருக்கும்.இந்த எலிகள் வீட்டில் உள்ள பொருட்களை உண்டு நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இவைகள் கடித்தால் உயிருக்கு ஆபத்து என்பதினால் எலிகளை கண்டு சற்று அஞ்ச வேண்டி இருக்கு.
ஒருமுறை வீட்டிற்குள் எலிகள் வந்துவிட்டால் அவற்றை அப்புறப்படுத்துவது என்பது சற்று கடினமான செயல்.ஆனால் சில ட்ரிக்ஸை தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் எலிகளை எளிதில் வெளியேற்றி விடலாம்.
இதற்கு தேவைப்படும் பொருள் காய்ச்சல் மாத்திரை மற்றும் கோதுமை மாவு.ஒன்று அல்லது இரண்டு காய்ச்சல் மாத்திரைகளை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.அதன் பின்னர் அதில் இடித்த காய்ச்சல் மாத்திரையை கொட்டி கலக்கவும்.
அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எலிகள் நடமாடும் பகுதியில் வைத்து விட்டால் அதை உண்டு எலிகள் தெறித்தோடி விடும்.
மற்றொரு தீர்வு:-
நாப்தலின் உருண்டை ஒன்று எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து இடித்துக் கொள்ளவும்.இதை ஒரு ஸ்பூன் கடலை மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் இதை தூவி விட்டால் நாப்தலின் கலவை வாசனைக்கு எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.