அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம்

0
113
A fine of around 22 lakhs will be imposed on those who put up posters and litter without permission

அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம்

பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

சென்னையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 300 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.10 லட்சத்து 95 ஆயிரத்து 410 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய 451 நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.