அப்படி போடு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கே அபராதமா? தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0
132

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு என்பது கடைசிகட்ட ஆயுதம் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னரே அறிவித்து இருக்கிறார். ஆகவே மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவேளையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த நோய் தொற்று என்பது கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகம் எடுப்பதிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதமும், எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த நோய் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் சென்றாலே 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேபோல இது தொடர்பாக பொது துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டிருக்கின்ற ஒரு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாடு பொதுசுகாதார சட்டப்படி முக கவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, போன்றவை தவறான பழக்க வழக்கம் ஆகும் ஆகவே இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல இனி தலைமைச் செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.