Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

a-fire-in-a-chicken-shop-sensational-incident

a-fire-in-a-chicken-shop-sensational-incident

கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம்.இவர் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் பிராய்லர் கடை ஒன்று வைத்துள்ளார்.அந்த கடையை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகின்றார். ஜெகதீஸ்வரன் காலை தண்ணீர் காய வைப்பதற்காக சென்றுளார்.அப்போது கேஸ் செல்லும் டியூப்பில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.அதனால் அதில் திடீரென தீப்பிடித்தது.அப்போது  அருகில் இருந்த பொருட்களும் எரிய தொடங்கியது.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதன் பிறகு கேஸ் கசிவையும் நிறுத்தினார்கள்.மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள் தப்பியது.

கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் ,எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.இதனைதொடர்ந்து  கடையின் மேற்புறத்தில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இதனையடுத்து இந்த சம்பம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் கேஸ் சிலிண்டர் நல்ல நிலையில் தான் உள்ளது ஆனால் நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர்.பழுதான டியூப்பை பயன்படுத்தியேதே தீ விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தீ விபத்தில் 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது என கூறப்படுகின்றது.

Exit mobile version