Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

A fire in a commercial building! Court order to seal!

A fire in a commercial building! Court order to seal!

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் தலைநகரத்தில் எண்ணற்ற அளவில் அடுக்குமாடி கட்டிடங்கள், அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் அடுமாடி குடியிருப்புகள் இருகின்றது.அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள்.தீ பிடிக்க தொடங்கியதும் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.மேலும் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.மேலும் இந்த தீ விபத்தை தொடர்ந்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க இஸ்லாம்பாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள மநகராட்சி ஆணையம் குழு ஒன்றை அமைத்து தீபிடித்த கட்டிடத்தின் திறன் குறித்து விசாரணை மேற்கொண்டு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version