Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எறிந்த தீ….கேரளாவில் பரபரப்பு!!

ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எறிந்த தீ….கேரளாவில் பரபரப்பு!!

திருவனந்தபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீ பிடித்தது.

கேரளா, ஆற்றிங்கல் டூ திருவனந்தபுரம் நோக்கி செல்வதற்காக இன்று காலை அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் செண்பகமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது.இதனை கவனித்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி நடத்துனர் உதவியுடன் பயணிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.இந்த தீ விபத்தால் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர்.

இதனை தொடர்ந்து நேரம் கடந்து செல்ல பேருந்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எறியத் தொடங்கியது.மேலும் இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தீயணைப்பு துறையினருக்கு உதவியாக விபத்து நடந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தீ விபத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்நிலையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

Exit mobile version