Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் பூ!! இதன் முழு விவரம்!!

#image_title

சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் பூ!! இதன் முழு விவரம்!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை வெளியே அனுப்பும் வேலையை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும் போது உடலின் இயல்பான பணிகள் நடைபெறாது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் சிறுநீரகத்தில் கல் உருவாகும். இயற்கை முறையில் இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

சிறுபீளை இதை பூலாப்பூ, கற்பேதி, கண்பீளை, கண்ணுப்பூளை, பொங்கல்பூ ஆகிய பெயர்களாலும் அழைப்பார்கள். இது நீர்நிலைகளையொட்டிய பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் வளரக் கூடியது.

சிறுபீளையின் வேர், இலை, பூ, தண்டு என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்தவை. சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 99 வகை மலர்களில் சிறுபீளைப் பூவும் ஒன்று.

சிறுபீளையை வேருடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வேரில் கல்லடைப்பை சரி செய்யக்கூடிய மிகுந்த பலன் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபீளை வேர் மற்றும் பூ, குச்சி அனைத்தையும் சிறிது சிறிதாக உடைத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி ஒருவர் ஒரு நாளைக்கு 50ml முதல் 100ml வரை இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். இதனை 10 நாள் முதல் 15 நாள் வரை தொடர்ச்சியாக குடிக்கலாம்.

இது கல்லடைப்பை மட்டும் அல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்திற்கு சிறுபீளை கஷாயத்தை குடித்து வருகையில் கால் வீக்கம் குறையும்.

Exit mobile version