தலைமைச் செயலாளரிடமிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

0
122

விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படவும், தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லோரும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். அதில் அரசு பரிந்துரை செய்துள்ள படிவத்தில் அனைத்து அதிகாரிகளும் வருடாந்திர வருமானம் தொடர்பான தகவலை சமர்ப்பிக்க வேண்டும்.

அதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரிலோ அல்லது அவர்களுடைய குடும்பத்தினரின் பெயரிலோ இருக்கும் அசையா சத்துக்கள் தொடர்பான முழுமையான விவரங்களையும், தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த தகவல் அனைத்தையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வேலை தாக்கல் செய்யாவிடில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

அதுபோல தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார் இறையன்பு. அந்த விதத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருக்கிறார்.

அதாவது விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதோடு விடுமுறையில் செல்லும் பொழுது அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கு ஏற்றவாறு மாற்று தொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் ,இந்த உத்தரவை அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.