கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

0
259
A full strike in Coimbatore! Annamalai who hit a different ball on the court!

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து பல தகவல்கள் தினம் தோறும் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. உயிரிழந்தவருக்கு அரங்கேறியது எதிர்ச்சியான விபத்து அல்ல இவர் உயிரிழப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில் இது தற்கொலை படை தாக்குதல் என அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டார். அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது வரை முதல்வர் வாய் திறக்காதது ஏன் என்றும் பல கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தனர்.

மக்கள் எந்த ஒரு அச்சமின்றி இயல்பு வாழ்க்கை நடத்துவுமாறு கூறிவிட்டு,என்ஐஏ அதிகாரிகளிடம் வழக்கை விசாரிக்க பரிந்துரை செய்வதும், கோவையை சுற்றி 3000 திற்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து வைத்திருப்பது ஏன் என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து வரும் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறியிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையிடம் அனுமதி பெற்றதாக எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் பதிலளிக்கும் படியும் கேட்டுள்ளனர்.அந்த வகையில் பாஜக அண்ணாமலை சார்பில், மாநில அளவில் தற்போது வரை எந்த ஒரு போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட அளவில் தான் அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இது எந்த வகையான போராட்டம் என்றும் தற்பொழுது வரை முடிவு செய்யப்படவில்லை என கூறி அந்தர் பல்டி அடித்தனர்.

அத்தோடு மாவட்டம் சார்பில் இவ்வாறு போராட்டம் குறித்து அறிவிப்பு கூறி இருக்கலாம் ஆனால் நாங்கள் தற்பொழுது வரை அந்த போராட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் கூறினர். இதற்கு அடுத்தபடியாக நீதிபதிகள் கூறியதாவது, இவர்கள் அனுமதி இன்றி போராட்டம் நடை பெற்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.