Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்… 

 

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்…

 

திருப்பதி அருகே செம்மரம் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

திருப்பதி அருகே சேஷாசலம் என்ற பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டும் விளைந்து வருகின்றது. இதையடுத்து இந்த செம்மரங்களை வெட்டி நாடு கடத்துவது வியாபாரம் செய்வது கடந்த 30 ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று வருகின்றது.

 

செம்மரங்களை வெட்டி கடத்துவதை தடுக்க அரசு எத்தனையே முயற்சிகளை செய்து வந்தாலும் இந்த செம்மரக் கடத்தல் மட்டும் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக விலை கிடைப்பதால் இந்த செம்மரங்கள் வெட்டி நாடு கடத்தப்படுகின்றது.

 

இந்த நிலையில் சேஷாசலம் வனப்பகுதியில் விளையும் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த அந்த தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் இரகசியமாக கண்காணித்து வந்தனர்.

 

இதையடுத்து சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தாக தமிழகத்தை சேர்ந்த 47 கூலித் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

 

இது குறித்து காவல் துறை சார்பில் மொத்தம் 51 மரங்களை வெட்டி கடத்த முயன்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் வரும். வெட்டிய இந்த 51 செம்மரங்களையும், 6 சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

கைதான 47 பேர்களும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version