Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கின்ற அக்கரை நெகமம் என்ற கிராமத்தை சார்ந்தவர் மோகன்ராஜ். இவர் ஒரு விவசாயி இவருடைய மனைவி பேபி இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்யஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் தான் மோகன்ராஜ் நேற்றைய தினம் காலை 5 கிராமத்தில் இருக்கின்ற தன்னுடைய சம்மங்கி தோட்டத்திற்கு மகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அவருடைய தோட்டத்தில் அதிக அளவு நீர் தேங்கி நின்று இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து குழந்தை தன்யஸ்ரீ தோட்டத்தின் அருகே நிற்க வைத்துவிட்டு மோகன்ராஜ் அங்கே தேங்கி இருந்த தண்ணீருக்கு அருகில் இருக்கின்ற கொப்பு வாய்க்காலில் நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளார். சற்று நேரத்திற்கு பிறகு அவர் சென்ற பின்னர் குழந்தை தன்யஸ்ரீ காணாமல் போனார்.

பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால் அவர் கொப்பு வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்று நினைத்த மோகன்ராஜ், இது தொடர்பாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வழங்கினார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கொப்பு வாய்க்காலில் தீவிர தேர்தல் பணியில் இறங்கினர். அந்த சமயத்தில் சில கிலோமீட்டர் தொலைவில் தண்ணீரில் குழந்தை தன்யஸ்ரீ கிடப்பதை கண்ட தீயணைப்பு துறை வீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை தன்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version