கடந்த 2012 ஆம் வருடம் தலைநகர் டெல்லியில் நர்மதா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
அந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய தாயாருடன் அரசு பேருந்தில் தாம்பரத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்தில் 3 பேர் அமரும் இருக்கையில் தாயும், மகளும், அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த சிறுமியின் அருகே இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பேருந்து செல்ல, செல்ல, அந்த சிறுமியை உரசிய அந்த இளைஞர் அந்த சிறுமியின் மேல் கை போட்டு பாலியல் தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, மன உளைச்சலடைந்த அந்த சிறுமி அழுதிருக்கிறார். இதனை கவனித்த தாய் அந்த சிறுமியிடம் கேள்வியெழுப்பியபோது பேருந்தில் அருகிலிருந்தவர் செய்த கொடுமைகளை தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமியின் தாய் மற்றும் பேருந்திலிருந்த மற்ற பயணிகள் அனைவரும் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். அதன் பிறகு மதுராந்தகம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்திருக்கிறார்கள்.
காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளைஞர் மதுராந்தகத்தையடுத்து இருக்கின்ற முதுகரை கிராமத்தைச் சார்ந்த சதீஷ் என்பதும், அவர் சென்னையில் ஜெயின் தாமஸ் மவுண்ட் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும், தெரியவந்தது.
சிறுமியின் தாயார் வழங்கிய புகாரினடிப்படையில் காவலர் சதீஷ் மீது மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை காவலர் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.