வாழ்க்கை செழிக்கவும் அனைத்து தரப்பிலும் வெற்றி பெறவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவது சிறந்தது. எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்வில் திருப்தியும் செல்வமும் நிறைவடையட்டும்!
திங்கட்கிழமை – சிவபெருமான்
சிவனின் அருள் பெருமை எண்ணிக்கொள்வதற்கான சிறப்பான நாள் திங்கட்கிழமை. ஈசனை நினைத்து விரதமிருந்து, பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். உங்களுக்கு மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தி பெருகும்.
செவ்வாய்க்கிழமை – முருகன், துர்க்கை, அனுமன்
செவ்வாய்க் கிழமையில் முருகப்பெருமான், துர்க்கை அம்மன், மற்றும் ஆஞ்சநேயரின் அருள் வேண்டி விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும், வளமையும் அதிகரிக்கும்.
புதன்கிழமை – விநாயகர்
புதன்கிழமை விநாயகரை வணங்குவதற்கு மிகச்சிறந்த நாள். ஏதேனும் புதிய சுப காரியத்தை தொடங்குவதற்கு முன், முதல் கடவுளாக வணங்கினாள் வெற்றி உறுதி!
வியாழக்கிழமை – விஷ்ணு மற்றும் லட்சுமி
வியாழக்கிழமை பகவான் விஷ்ணுவின் புனித நாளாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் லட்சுமி தேவியையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்குவதால் உங்கள் வாழ்க்கையில் செல்வமும் ஞானமும் சேர்க்கப்படும்.
வெள்ளிக்கிழமை – துர்க்கை மற்றும் அவதாரங்கள்
வெள்ளிக் கிழமையில் துர்க்கை அம்மனின் அருள் பெற விரதமிருந்து, அவருடைய அவதாரங்களை பக்தியுடன் வணங்குங்கள். பெண்களுக்கு சிறப்பான நாள், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிறையும்.
சனிக்கிழமை – திருமால், ஆஞ்சநேயர், காளி, சனி பகவான்
சனிக்கிழமையில் திருமாலையும், ஆஞ்சநேயரையும், காளி அம்மையையும் வணங்குங்கள். நீதி அரசர் சனி பகவானை துதிப்பதால், துரதிருஷ்டம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி தேடிவரும்.
ஞாயிற்றுக்கிழமை – சூரிய பகவான்
சூரிய பகவான் நவகிரகங்களில் முதன்மையானவர். ஞாயிறு அன்று அவரை விரதமிருந்து வணங்கினால் சூரிய தோஷம் அகன்று, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் தங்கிடும்.