Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்! 

Important news for teachers! This is the last day to apply for transfer!

Important news for teachers! This is the last day to apply for transfer!

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்! 

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள்மனமொத்த  மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் 8-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து இருந்தது.

இதனால் ஆசிரியர்கள் எமீஸ் தளத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு தற்காலிகமாக பள்ளிக் கல்வித்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் கலந்தாய்வு மே மாத இறுதியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அரசு ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு  விண்ணப்பங்களை வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி சமர்பிக்க  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மனமொத்த கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

மாறுதல் வாங்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகங்களில் வருகின்ற ஜூன் 19ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர்  எமிஸ் தள த்தில் ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை  பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்..

அதன்பிறகு அரசின்  வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக  பின்பற்றப்பட்டு அதன் அடிப்படையில்   விண்ணப்பங்களை இறுதி முடிவு செய்து  மனமொத்த மாறுதல் ஆணைகள் ஆசிரியர்களுக்கு வருகின்ற  ஜூன் 30-ம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகளால் வழங்கப்படும்.

Exit mobile version