FD கணக்கில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

0
147

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகள் எஃப்டிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றது. ஸ்ரீராம் ஃபைனான்ஸின் புதிய எஃப்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, இந்த என்பிஎஃப்சிகள் எஃப்டிக்களுக்கு 9.36% வட்டியை தருகிறது. இதுதவிர 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்த்தியது மற்றும் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7.30 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

அதனை தொடர்ந்து 24 மாத காலத்திற்கு வட்டி விகிதத்தை 25 bps ஆகவும், 30 மாத எஃப்டிகளுக்கு 8 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அதேசமயம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது மற்றும் பெண்களுக்கு 0.10 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ரெப்போவை 5 முறை உயர்த்தியது, இதனையடுத்து மேலும் 0.35 சதவீதம் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தியது. ஸ்ரீராம் மட்டுமள்ளாது எஸ்பிஐ, பிஎன்பி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, எஸ் வங்கி போன்ற வங்கிகளும் எஃப்டிகளுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.