மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

0
144
A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை பார்த்த பொது நிலை வழக்கறிஞர் காசி விசுவநாதர் மதுரை மண்டல பொது மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் மனு ஓன்று அளித்து இருந்தார். இந்த புகார் மனு இன்று தீர்ப்புக்கு வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் நமச்சிவாயம் விசாரணை செய்யப்பட்டு, அதன் பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாய் மீது அரசு பேருந்து மோதியதால், பேருந்து ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் அரசு ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.