உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி தொடங்கியது.இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர்,உலகம் முழுவதும் WHO-ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
கை கழுவது என்பது மருத்துவமனை மூலம் பரவும் கிருமி தொற்றால் இருந்து சுகாதார பணியாளர்களை காத்துக்கொள்வது தான என்றார்.உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில்,24 சதவீதம் கை கழுவுவதில் கவனம் செலுத்தாததால் நோயாளிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.கை சுகாதாரம் பேணப்பட்டால் 70 சதவீத உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என WHO தெரிவிக்கிறது.
தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம்,துணை சுகாதார நிலையங்களில் 2286 மருத்துவமனையில் ஒரே நேரத்தில் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக புற்றுநோய் பாதிப்பு கூடுவதாக மருத்துவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.நிதி நிலை அறிக்கையில் கேன்சர் ஸ்கிரீனிங் மூலம் எந்தளவு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்து மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரோடு, ராணிப்பேட்டை கன்னியாகுமரி போன்ற கேன்சர் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கேன்சர் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது என்றும் தாளவாடி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து மலைக்கிராமங்களில் மருத்துவ சேவை செய்யப்படும் எனவும் உங்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக கை கழுவப்படாது என்றார்.