கண்கள் நமக்கு மிக முக்கிய உறுப்பாக திகழ்கிறது.கண்களை நாம் பாதுகாத்து வந்தால் வயதான பின்னர் ஏற்படும் கண் சம்மந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
வெளி உடல் உறுப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது கண்கள் தான்.நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் கண் பார்வை மங்குகிறது.சிறு வயதில் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
கண்கள் பார்வையை தெளிவாக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் கண் பார்வை திறனை அதிகரிக்க முடியும்.
கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகள்:
*வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
*கேரட்,பப்பாளி,அக்ரூட்,முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.
*பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண் நோய் தொற்றில் இருந்து தப்பித்துவிடலாம்.
கண் பார்வையை அதிகரிக்கும் வீட்டு வைத்தியம்:
தேவைப்படும் பொருட்கள்:-
1.பாதாம் பருப்பு – 10
2.பசும் பால் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை:-
கண்களுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் பாதாம் பருப்பில் அதிகமாகவே உள்ளது.பத்து பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து பிறகு தோலை நீக்கிவிட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பாதாம் பேஸ்டை அதில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
பார்வை திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்:
தினமும் கண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.கண்களை உள்ளங்கைகளால் மூடி சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.கண்களை சிமிட்டி பயிற்சி எடுக்க வேண்டும்.இதை செய்து வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.