Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை!

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை!

பலருக்கும் வாழ்க்கை மற்றும் தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. பல வகைகளில் அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான பலனை அடையாமலே இருப்பர். இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு உள்ள எதிரிகள் தான்.

பலருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட இருப்பார். அவர்களுடைய கெட்ட பார்வை தான் இவர்களால் தற்பொழுது வரை வெற்றி அடைய முடியாது அதற்கு ஒரு காரணம். அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.

இவ்வாறு கெட்ட எதிரிகளின் பார்வையை எதிர்க்கக் கூடியது தான் வெண்கடுகு. தீய திருஷ்டிகளையும் தகடு பொடி ஆக்குவது இந்த வெண்கடுகு முக்கிய பங்கு வகிக்கிறது. பாட்டு மருந்து கடைகளில் வெண்கடுகு கேட்டால் கிடைக்கும்.

அதனை வாங்கி வந்து ஒரு கருப்பு துணியில் கட்டி எடுத்துக் கொள்ள. ஒரு மணல் விளக்கில் நாம் எடுத்து வைத்துள்ள வெண்கடுகை வைக்க வேண்டும்.அதனை வீட்டின் வாசலில் வைத்து எரித்து விட வேண்டும்.

அந்த வெண்கடுகையின் மீது நெருப்பு படும் பொழுது படபடவென்று வெடிக்க ஆரம்பிக்கும். அது எந்த அளவிற்கு எரிகிறதோ அந்த அளவிற்கு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

குறிப்பாக தொழில் வியாபாரங்களில் உள்ள எதிரிகள் பார்வை முற்றிலும் நீங்கும். அதேபோல இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது வெண்கடுகை தவறுதலாக கீழே கொட்டுவதோ அல்லது அதனை மிதிப்பதோ கட்டாயம் கூடாது.

எரிந்து முடிந்ததும் இதன் சாம்பலை வீட்டின் உள்ள மூளைகளில் சிறிதளவு ஆங்காங்கே போட வேண்டும். இதனை திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் செய்தால் மிகவும் நல்லது.

Exit mobile version