உடல் ஆரோக்கியம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.உடலில் இருக்கின்ற உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கினால் நோய் பாதிப்புகள் ஏற்படாது.குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே தரப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி புரோட்டீன் ஷேக் தயாரித்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
பொட்டுக்கடலை
பாதாம் பருப்பு
வாழைப்பழம்
பசும் பால்
பேரிச்சம் பழம்
தேன்
செய்முறை விளக்கம்:-
முதலில் 15 முதல் 20 பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊற விடவும்.
அதன் பின்னர் பாதாம் தோலை நீக்கிவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும்.அடுத்ததாக 1/4 கப் அளவிற்கு பொட்டுக்கடலையை அதில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சதை பற்றை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்ததாக மூன்று பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இவை இரண்டையும் அரைத்த பொட்டுக்கடலை பாதாம் கலவையில் சேர்க்கவும்.அடுத்ததாக 1/4 கப் அளவிற்கு காய்ச்சி ஆறவைத்த பேசும் பாலை அதில் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இப்பொழுது பேஸ்ட் பதத்திற்கு வந்திருக்கும்.பிறகு அதில் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
அதன் பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை ஊற்றிக் கொள்ளவும்.அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி தூய்மையான தேன் சேர்த்து கலக்கவும்.விருப்பப்பட்டால் இரண்டு பாதாமை துருவி அதன் மீது தூவிவிடலாம்.
பிறகு இந்த பானத்தை பருக வேண்டும்.இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு புரோட்டீன் ஷேக் ஆகும்.பெரியவர்கள்,குழந்தைகள் என்று அனைவரும் இந்த புரோட்டீன் ஷேக் குடிக்க வேண்டும்.