Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடைந்த எலும்புகளை ஒரே மாதத்தில் கூட வைக்கும் ஹெல்தி பானம்!! 30 நாட்கள் மட்டும் குடிங்க!!

இன்றைய காலத்தில் எலும்பு முறிவு,மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.நெடுநேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது,வயது முதுமை,அடிபடுதல்,எலும்பு தேய்மானம் போன்ற காரணங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

எலும்பு சார்ந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக குணமாக கருப்பு உளுந்து,ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஹெல்தி ட்ரிங்க் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை ஜவ்வரிசி – ஒரு கப்
2)கருப்பு உளுந்து – ஒன்றரை கப்
3)ஏலக்காய் – இரண்டு
4)பார்லி – கால் கப்
5)சுக்கு துண்டு – ஒரு பீஸ்
6)பால் – ஒரு கப்
7)நாட்டு சர்க்கரை – 100 கிராம்
8)தண்ணீர் – அரை கப்

செய்முறை விளக்கம்:-

**முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு கப் வெள்ளை ஜவ்வரிசி போட்டு குறைவான தீயில் ஒரு நிமிடம் வரை வறுங்கள்.

**அதேபோல் ஒன்றரை கப் கருப்பு உளுந்து மற்றும் அரை கப் பார்லி அரிசியை தனி தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.

**பிறகு ஒரு பீஸ் சுக்கு துண்டை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் சிறிது வாட்டி எடுக்க வேண்டும்.இந்த சுக்கை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

**அடுத்து இரண்டு ஏலக்காய் சேர்த்து நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி குறைந்த தீயில் சிறிது நேரம் சூடுபடுத்துங்கள்.

**அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த உளுந்து பவுடர் நான்கு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.இந்த கலவையை கொதிக்கும் பாலில் ஊற்றி கரண்டு கொண்டு கைவிடாமல் கலந்துவிடுங்கள்.

**பால் கெட்டியாகும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை ஆப் செய்துவிடுங்கள்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் மூட்டு எலும்புகள் வலிமைபெறும்.உடல் எலும்புகள் உறுதியாக இருக்க இந்த உளுந்து பால் ரெசிபியை தினமும் செய்து பருகலாம்.கருப்பு உளுந்து களி,கருப்பு உளுந்து லட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

Exit mobile version