உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!!

0
117
A herb that removes worms in the stomach

உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!!

நம் ஊர் வயக்காடு மற்றும் தெருவோரங்களில் செழிப்பாக வளரும் மூலிகைகளில் ஒன்று ‘நாய் கடுகு’.இந்த செடியில் உள்ள விதை சமையலுக்கு பயன்படுத்தும் கடுகின் தோற்றத்தை ஒத்திருப்பதால் தான் இதற்கு நாய் கடுகு என்ற பெயர் வந்தது.

இந்த நாய் கடுகு செடியின் வேர்,தண்டு,இலை,விதை அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த செடியை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இதன் பெயர் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. பலரும் இதை ஒரு களைச்செடி என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாய் கடுகு செடியின் மருத்துவ பயன்கள்:

நாய்கடுகு இலையில் கசாயம் செய்து குடித்தால் வயிற்றில் இருக்கின்ற புழுக்கள் அனைத்தும் துடிதுடித்து இறந்து விடும்.

நாய் கடுகு விதையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு சூடான பாலில் கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

நாய் கடுகு இலையை விழுதாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு காதுகளில் ஊற்றி வந்தால் காது வலி,காது இரைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தினமும் ஒரு கிளாஸ் நாய் கடுகு தேநீர் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

நாய் கடுகு விதையை உலர்த்தி பொடியாக்கி காய்ச்சாத பாலில் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி முகம் முழுவதும் தடவி வந்தால் சரும பிரச்சனை முழுமையாக சரியாகும்.

ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் நாய் கடுகு பொடி சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் நாய் கடுகு பொடி சேர்த்து குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.