Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

#image_title

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ,அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து. இதில் ஆட்டோ கார் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது அதன் பின்னால் வந்த ஆட்டோ சொகுசு கார் ஆகியவையும் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து சந்திப்பு நோக்கி அதி வேகமாக வந்த தனியார் பேருந்து சிக்னல் அருகே வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ,சொகுசு கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதியது .

அரசு பேருந்துக்கும் சொகுசு கார் தனியார் பேருந்துக்கும் இடையில் சிக்கிய ஆட்டோ விபத்தில் கடும் சேதமானது.இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் படுகாயம் அடைந்தனர்.மேலும் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து மோதிய தனியார் பேருந்து முன் பகுதி முற்றிலும் சேதமானது. அதேபோன்று சொகுசு காரின் பின்பகுதியில் சேதமான நிலையில் நின்று கொண்டிருந்த நபர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு ஆட்டோவில் சிக்கிய ஓட்டுனர் மற்றும் பயணிகளை படுகாயத்துடன் மீட்டனர் மேலும் பேருந்து மற்றும் காரில் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு 108 அவசர உறுதிக்காக காத்திருந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு மேலாக 108 ஆம்புலன்ஸ் வராத நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதுடன் இந்த குழுமத்தின் பேருந்துகள் தான் அடிக்கடி திருநெல்வேலி மாநகரத்தில் விபத்தை ஏற்படுத்துவதாக கூறி பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர் உடனடியாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுனர் பேருந்து இயக்கியதும் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு ஓட்டுநர் மற்றும் நடத்தின குடித்துவிட்டு வாகனத்தை இயக்கினார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version